July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி

ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

ஈரோடு நவ.03

ஈரோடு அருகே செயல்பட்டு வரும் சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் தொழில் முனைவோர் கான விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே உள்ள சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மேலாண்மை துறை சார்ந்த பேராசிரியை ஸ்டெல்லா ஏஞ்சல் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதில் மேலாண்மை துறையைச் சார்ந்த துறையின் தலைவர் விமலா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் டாக்டர் மனோகரன் அவர்கள் பாராட்டுறை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கே. சசிகுமார் . ஈரோடு மாவட்ட திட்ட மேலாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பேசும்போது.. சிறு குறு தொழில் முனைவோருக்கு மாநில அரசு மூலம் பெறப்படும் பயன்பாட்டையும் திட்டங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதன் மூலம் தொழில் செய்து பயன் அடைந்தவர்களை பற்றியும் அவர் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் இறுதியில் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் மற்றும்ப பொறுப்பாளர் ஆர் டி என். கே. கலைச்செல்வன் மற்றும் பொருளாளர் வி.டி கேசவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை பாராட்டினர்.