605 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து…
, 1., 84..491 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குகிறார்…
தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செய்து.. பொல்லான் மணிமண்டப அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
ஈரோடு.நவ. 26
ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 26 ஆம் தேதி சுற்றுப் பயணம். மேற்கொள்கிறார். முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று 25ஆம் தேதி கோவை வந்த நிலையில் அங்கு காலை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். அன்று மாலை தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று நவம்பர் 26 ஆம் தேதி காலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஈரோடு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர் காலை 8:30 மணி அளவில், மொடக்குறிச்சி அருகே உள்ள ஜெயராமபுரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்தி துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் மணிமண்டப அரங்கத்தினை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அரச்சலூர் அருகே உள்ள ஓடா நிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் வெண்கல சிலை அமைப்பதற்கான அடிகளை நாட்டி, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சிகள் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
பின்னர் காலை சரியாக 11 மணியளவில் சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகை தரும் அவர், அங்கு முடிவற்ற 605 திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். பின்னர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த விழா மேடையில் 1..84..491 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் சார்பில் நலத்த உதவிகளை வழங்கிய விழா பேருரை ஆற்றுகிறார்.
பின்னர் மாலை சித்தோடு அருகே பால்வளத் தந்தை என்று அழைக்கப்படும் பரமசிவம் அவர்களின் திருவுருவை சிலையை திறந்து. வைக்கிறார்.
அதன் பின்னர் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளும் ஈரோடு மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கந்தசாமி தலைமை வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் சு. முத்துசாமி, மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ஏ ஜி வெங்கடாஜலம், ஈரோடு கிழக்கு வி. சி சந்திரகுமார், மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், அனைத்து பேரூராட்சி தலைவர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து. கொள்கின்றனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு ஈரோடு வருகை தருவதை முன்னிட்டு, பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகளின் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!