வந்தவாசி , நவ 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.செல்வம், வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார், நகராட்சி ஆணையர் சோனியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது அங்கு வரையப்பட்ட விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!