கழக தலைவர் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சமீபத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் இன்று புதுச்சேரி திமுக அலுவலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகைத்தந்து புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா அவர்களை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
அதேவேளை, மாநில கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் சிவா அவர்களுலும் கழக அவைத் தலைவர் சிவகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், தங்கவேல், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், தியாகராஜன், மற்றும் மாநில நிர்வாகிகள் இணைந்து ஓம்சக்தி சேகர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மனமகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.