தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்று திறனாளி வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பு..
ஈரோடு. மார்ச். 03
உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராவாலி ஒலிம்பிக் வாலிபால் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு பாராவளி அசோசியேசன் மற்றும் ஈரோடு பாராவளி அசோசியேசன் இணைந்து, மாற்று திறனாளி ஆண் பெண் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராபலி பால் போட்டிகளை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சி மற்றும் போட்டித் தேர்வு கடந்த மாதம் ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 14 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் அவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அளித்து செல்லப்பட்டு அங்கிருந்து உத்தர பிரதேசத்திற்கு அளித்து சென்று போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
உத்திர பிரதேசம் மாநிலம் வீரத் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 14வது மாற்றுத் திறனாளி பெண்களுக்கான சீனியர் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாராவளி அசோசியேசன் மற்றும் ஈரோடு மாவட்ட பாராவளி அசோசியேசன் சார்பாக, தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் ராஜாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கும் வகையில் அழைத்து சென்று வந்துள்ளார்.
மற்றும் இவருடன் இணைந்து ஈரோடு மாவட்ட சட்டக் கல்லூரி துணைத் தலைவர் டி. கார்த்திகேயன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..