புதுச்சேரி மாநிலம் ஸ்ரீ வீ பி சுவாமிகள் பராம்பரிய கலாச்சார மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் (இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் அரசியல் சார்பற்ற மனித உரிமைகள் அமைப்பு) இணைந்து பாரம்பரிய மற்றும் அனுபவ வாய்ந்த மருத்துவ பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் பாரம்பரிய மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ பணியாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சமுதாய மருத்துவ சேவை சான்றிதழ் வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச் சங்கம் அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலைத்தாய் சஞ்சனா நாட்டியம் நடைபெற்றது.விழாவுக்கு புதுச்சேரி ஆயுஷ் இயக்குனர் டாக்டர் இந்திரா தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர் குருவருள் செல்வர் டாக்டர் கா.இருசப்பன் அடிகளார் வரவேற்புரை ஆற்றினார்.புதுச்சேரி காவல்துறைபோக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் சி.மாறன் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் நிறுவனர் & தேசிய தலைவர் பாரத் சேவா ரத்னா டாக்டர் பால. கன்னியப்பன், புதுச்சேரி ஜமால் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஜமால் என்கிற ஜமாலுதீன், அவர்கள் புதுச்சேரி ஜமால் ஜமால் அறக்கட்டளை ஜாகிர் உசேன், டாக்டர் வெங்கடாஜலபதி, இந்தய மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கத்தின் தேசிய பொருளாளர் டாக்டர் மதுரை லிங்கச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் இந்திய மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம்தேசிய செயலாளர் பாண்டுரங்கன், தேசிய பொருளாளர் டாக்டர் லிங்கச்செல்வி, தேசிய ஒருங்கிணைப்பாளர் குமார் என்கிற சின்னசாமி, புதுச்சேரி மாநில தலைவர் தாபா பிரகாஷ், தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைப்பாளர் கவிஞர் புவனேஸ்வரி , தேசிய அமைப்பாளர் கருணாநிதி, தேசிய துணை செயலாளர் ரமேஷ், தேசிய மகளிர் அணி அமைப்பாளர் காரைக்கால் சித்ரா, தேசிய இளைஞர் அணி அமைப்பாளர் செபஸ்டின், மாநில இளைஞரணி தலைவர் ஜோசப்சந்திரன், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் மனோபாலா, மாநில மகளிர் அணி துணை தலைவர் பேராசிரியர்ராஜலட்சுமி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஈஸ்வரிதேவி, மதுரை மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜலட்சுமி, மாநில கலைப்பிரிவு சஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அட்டமா மாநில அமைப்பாளர் டாக்டர் செந்தில் குமார் நன்றி கூறினார்.


More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கான பணிகளை செய்வது மட்டுமே எங்கள் சிந்தனை…