தாக்குதலில் காயமடைந்த அதிமுக பூத் ஏஜென்ட் – கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல்
1 min read
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி பண்ணிஅள்ளி ஊராட்சி வரட்டம்பட்டி கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக பூத் ஏஜென்ட் மணி, திமுகவினரால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம்.சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு