*ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு*கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எண்ணும் மையத்தில், 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளின் முன்புறம், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல், மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் என, 297க்கும் மேற்பட்டவர்கள் கல்லுாரி வளாகத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 68 போலீசார், 20 ஆயுதப்படை போலீசார், 6 மத்திய துணை ராணுவப்படையினர் ஒரு ஷிப்ட்-க்கு, 99 பேர் என மொத்தம், 297 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!