அதாவது கழுத்தில் லிங்கம் அணிந்து அங்காளம்மனுக்கு பூஜை செய்பவர்களே லிங்கதாரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு லிங்கம் அணிந்து பூஜை செய்யும் லிங்கதாரர்கள் மார்கழி மாத சிறப்பு ஆருத்ரா நாளான இன்று சன்னு முனிவர் ஜீவசமாதி யின் மேல் லிங்கம் அமைத்து பூஜை செய்தனர்.
லிங்கபூஜைக்காக ரோஜா, செவ்வந்தி, மல்லி, சங்கு புஷ்பம், சென்பக மலர் உட்பட 27 வகையான மலர்கள் 501 கிலோ கொண்டு லிங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் லிங்கதாரர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த உற்சவர் அங்காளம்மனை முன் நிறுத்தி சன்னு முனிவர் ஜீவசமாதியின் மேல் லிங்கம் அமைத்து லிங்கதாரர்கள் தங்கள் அணிந்திருந்த லிங்கத்திற்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்து அதன் பின் லிங்க பாடல்கள் பாடி பூஜை செய்தனர்.
இவ்வாறு லிங்க பூஜை செய்வதால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து தூய மனதுடன் அங்காளம்மனை பூஜை செய்யலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாரம்பரிய முறைப்படி ஏழு வம்சாவழி பூசாரிகளும் ஒன்றிணைந்து ஆருத்ரா லிங்க பூஜையும் அங்காளம்மன் வழிபாடும் செய்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பட்டினை அறங்காவல் குழு தலைவர் ஏழுமலை , அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு