June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேட்டுப்பாளையம் அருகே அருள்மிகு ஸ்ரீ வன பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ 6.86 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை திறப்பு விழா!!

கோவை -ஜன:04

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகளான ஆற்றங்கரை விநாயகர் திருக்கோவிலுக்கு செல்லும் நடைபாதை மண்டபம் ரூ. 3.29 கோடி,முடி காணிக்கை மண்டபம் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறை ரூ. 1.55 கோடி, கோவில் சுற்றுச்சுவர் ரூ. 2.02 கோடி, ஆக மொத்தம் ரூபாய் 6.86 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் இணை ஆணையர் ரமேஷ்,செயல் அலுவலர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், காவல் ஆய்வாளர் சின்ன காமணன்,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை ஒன்றிய பொறுப்பாளர்கள் மேற்கு சு.சுரேந்திரன், வடக்கு எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், கிழக்கு காந்தி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முனுசாமி, காரமடை நகர பொறுப்பாளர் குரு‌பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பிரஸ்குமார், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திலீப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.