கட்சியினர் ஆதரவோடு களத்தில் கலக்கல்..
ஈரோடு. ஏப்ரல். 22
இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா கட்சியினர் ஆதரவோடு இறுதி எட்டு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை மறுதினம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஒன்றான பாரதிய ஜனதா கட்சி போட்டி இருக்கிறது.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களே மருமகள் கிருத்திகா சிவக்குமார் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்நாள் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வா, பியூஸ் கோயல், மத்திய உழுதடை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என பலரும் பாஜக வேட்பாளர் கிருத்திகாவுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
இந்த நாளில் நேற்று பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் கிருத்திகா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் உடன் சென்றனர்
.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!