மணப்பாறை நவ 08
திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் ராஜீவ் காந்தி சிலை அருகில், நாம் வாழும் இந்த நூற்றாண்டில், நிதிமூலதனமும், உற்பத்தி மூலதனமும் உலக பணக்காரர்கள் முதல் உள்ளூர் பணக்காரர் வரை எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்ல அவர்களின் சொத்துகுவிப்பும் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 70 பேர் 100 கோடி சொத்து வைத்திருந்தவர்கள் 358 நபர்களாக உயர்ந்துள்ளனர். அதானியின் சொத்து மதிப்பு 2014-ல் 63190 கோடியாக இருந்து தற்போது ரூ.10.32,400 கோடியாக உயர்ந்துள்ளது. அம்பானியின் சொத்து ரூ.1,65,540 கோடியிலிருந்து 10.63,550 கோடியாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை 542%ம் உயர்வாகும். இந்த கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைக்க வாஜ்பாய் காலத்திலிருந்தே சட்டங்களை திருத்த பெருமுயற்சி எடுத்து
வருகிறதுபாஜக

ஒன்றிய அரசால் 21.11.25ல் அறிவிக்கப்பட்ட Labour Code திருத்தத்தால் பலன் அடைவது தொழிலாளியா? முதலாளியா? தொழிலாளர் எண்ணிக்கையில் 90% பேரை சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகிறது. 50 கோடி முறை சாரா தொழிலாளர்களுக்கு சிறிய அளவில் பாதுகாப்பு வழங்கும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நலவாரியங்கள் முடக்கப்பட்டு அதிலுள்ள பல ஆயிரம் கோடி நிதிகளை மத்திய அரசின் திட்டத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட உள்ளது.
வேலை நேரம் இனிமேல் 8 மணி நேரம் இல்லை. அதற்கும் கூடுதலாக, எவ்வளவு நேரம் என்பதை முதலாளி நிர்வாகம் முடிவு செய்யும். போனஸ் 2 ஆண்டுகள் வரை கொடுக்காமல் இருக்கலாம். நிரந்தரமாக தொழிலாளி வைக்க வேண்டியதில்லை. எல்லோரும் அத்து கூலிகள். அதுவும் சம்பளம் ஒப்பந்ததார் மூலம் தான் வழங்கப்படும், வேலைக்கு அமர்த்துவதும் வேலை இல்லை என விரட்டுவதுமான உரிமை முதலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளம், சமூக பாதுபாப்பு இனி இல்லை. அது மட்டுமா? தொழிலாளர்களின் பாதுகாப்பு அரண்-தொழிற்சங்கம் சேரும் உரிமை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, ஏன் வேலை நிறுத்தம் செய்வதும் முதலாளிகளின் விருப்பத்திற்குட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு பெருகுமா? இருக்கும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை கூட்டுவது, வேலைவாய்ப்பை முடக்குவதுதான். வேலை நிறுத்தம் செய்தால் ஓராண்டு சிறை தண்டனை, தூண்டினால் இரண்டாண்டு, ஏன் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி கோரிக்கை மனு கொடுத்தாலோ, கோஷம் போட்டாலோ கிரிமினல் குற்றம் பதிவு செய்து 3 ஆண்டு சிறை தண்டனை. யாருக்காக? இது யெல்லாம் யாருக்காக? தொழிலாளர் நலனுக்காகவா?
மொத்தத்தில் 150 ஆண்டு காலமாக தொழிலாளர் பெற்று வந்த உரிமைகளை, சலுகைகளை பறித்து கார்ப்பரேட்டுகளின் காலடியில் தொழிலாளர்கள் இருக்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை பிஜேபி மோடி அரசு தொடுத்துள்ளது.
இனியும் அழுது கொண்டிருப்போமா? 150 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகள், சலுகைகள், ஆட்சியாளர்கள், முதலாளிகள் இரக்கப்பட்டு தந்ததல்ல, ரத்தம் சிந்தி, பொய் வழக்கு, சிறை தண்டனை, அடக்குமுறை, துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட உயிர்கள், இத்தனைக்கும் பிறகு தான் நெஞ்சை நிமிர்த்துகிறது தொழிலாளி வர்க்கம். 21.11.25 மோடி அரசால் அறிவிக்கப்பட்ட சட்டத்தை தொழிலாளி வர்க்க படை திரட்டி முறித்து போட்டு மூலையில் தூக்கி எறிவோம். முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,சி.பி.எம்
வி.சி.க ,சி.பி.எம்.எல் சார்பில் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவா ,சி.பி.எம் வெற்றிச்செல்வம் வி.சி.க கிழக்கு மாவட்டம் ,கனியமுதன் சி.பி.எம்.எல் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர் புறநகர் மாவட்ட செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,ராஜ்குமார் சி.பி.எம் சிவராஜ் வி.சி.க கிழக்கு மாவட்டம் ,குரு.அன்புச்செல்வன் வடக்குமாவட்டம் வழக்கறிஞர்.மா.கலைச்செல்வன் தெற்கு மாவட்டம் சி.சக்தி ஆற்றலரசு மாநகர் மேற்கு புல்லட் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு
விவசாய சங்க மாநில துணைச் செயலாளர்.த.இந்திரஜித் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் சிபிஐ மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் மண்டல அமைப்பு செயலாளர் வழ.ச.விவேகானந்தன்
சி.பி.எம்.எல் ஞானதேசிகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!