June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை தொகுதி

மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன்

தேர்தல் பரப்புரையில் த வெ க வேட்பாளர் ரா.கதிரவன் வாக்குறுதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவன் தொகுதி முழுவதும் சூராவளி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்

மணப்பாறை சட்டன்ற தொகுதிக்குட்ட மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நேற்று மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் காலை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மாலை 4 மணியளவில் மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து மாங்கனாபட்டி கரடிப்பட்டி, மணியங்குறிச்சி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கண்ணூத்து பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா. கதிரவன் பல்வேறு வாக்குறுதிகளை வாக்களர்கள் மத்தியில் வழங்கி பேசினார்.

மேலும் அவர் பேசுகையில் மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து பகுதி என்பது மலை பகுதி கிராமம் இங்கு பல கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர் அப்படிப்பட்ட இந்த பகுதியில் சரியான சாலை வசதிகள் இல்லை எளம னத்தில் இருந்து காண்ணூத்து செல்லும் சாலையை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகின்றேன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலைகளாக இருந்து வருகிறது.

மக்களின் அவசரத் தேவைக்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால் கூட அருகில் இருக்கக்கூடிய கருப்பூருக்கு தான் செல்ல வேண்டிய நிலைதான் இன்று வரை இருந்து வருகிறது கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கட்சியினர் ஆட்சி செய்தும் இந்த பகுதிக்கு எந்தவித விடியலும் தரவில்லை

இந்தப் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டுதான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அந்த கால்நடைகளுக்கும் ஏதாவது மருத்துவத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் அது இங்கிருந்து 10 கிலோமீட்டர் 15 கிலோமீட்டர் சென்று தான் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது

இந்த நிலை மாற வேண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு மாற்றம் தேவை என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அன்பு தம்பியாக உங்களில் ஒருவனாக உங்களுக்காக உழைக்க உங்களிடம் தற்போது நான் இங்கே வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

நிச்சயம் வெற்றி பெற்ற பிறகு கண்ணூத்து பகுதியில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை பள்ளி கொண்டு வரவும் மேலும் கால்நடை மருத்துவமனை சுகாதாரமான குடிநீர் பொது கழிப்பிடம் இப்படி மக்களின் அடிபடை வசதிகள் அனைத்தும் வெற்றி பெற்ற மூன்றே மாதத்தில் நான் நிச்சயம் சத்தியமாக நிறைவேற்றி தருவேன் ஒரு இளைஞனாக உங்கள் மத்தியில் நான் நின்று கொண்டு வாக்குறுதி தருகிறேன் நிச்சயம் என்னை நம்புங்கள் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் இத்தனை வருடங்கள் உங்களிடம் வாக்குக்காக வந்து வாக்குகளை பெற்ற பிறகு பல்வேறு கட்சிகள் உங்களை கண்டுகொள்ளவில்லை நான் இதே ஊரைச் சேர்ந்தவன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்களுக்கு உதவி செய்யவேன் என்னை நம்பி எனக்கு இந்த ஒரு முறை விசில் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச்செய்யுங்கள் நிச்சயம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்

முன்னதாக கண்ணூத்து ஊராட்சியின் எல்லையில் பெண்கள் இளைஞர்கள் வானவேடிக்கை தாறை தப்பட்டையுடன் ஆராத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர்.