திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர் கதிரவன் தொடர்ந்து மருங்காபுரி துவரங்குறிச்சி மணப்பாறை வையம்பட்டி ஒன்றியங்களில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
நேற்று காலை தனது சொந்த ஊரான வையம்பட்டி ஒன்றியம் பொன்னம்பலம் பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி பல்வேறு கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து தமிழக வெற்றிக்கழக சின்னமான விசில் சின்னத்திற்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் பேசியதாவது:




மணப்பாறை சட்டமன்ற தொகுதி என்பது மிகப்பெரிய சட்டசபை தொகுதி ஆகும் இந்த தொகுதியில் ஏற்கனவே ஆண்ட கட்சியும் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சுகாதாரம் சாலை வசதி மருத்துவ வசதிகள் எதுவும் இது வரை இவர்கள் எதையும் செய்து கொடுக்கவில்லை தொடர்ந்து தொகுதி முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இளைஞர்களுக்கு இதுவரை எந்தவித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் மத்தியில் காண முடிந்தது அப்படிப்பட்ட சூழலில் தற்போது தமிழகத்தில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் தலைவர் விஜய் அவர்கள் தனக்கான வருமானத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் மக்களால் தான் வளர்ந்தோம் அதே மக்களுக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு கழகத்தை உருவாக்கி மக்கள் பணியாற்ற வந்துள்ளார்
நான் விஜயின் தம்பி உங்களுக்காக எந்த நேரமும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் நமது மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன் பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் முற்றிலும் சிதலமடைந்து கிடக்கும் நிலையை காண முடிந்தது அவர்களுக்கு நிச்சயம் நல்ல வீடு கட்டித் தர நான் பாடுபடுவேன் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கவும் ஒரு இளைஞனாக மணப்பாறை மண்ணின் மைந்தராக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர இந்த இளைஞனுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்
மணப்பாறை தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றிக் காட்டுகிறேன் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!