August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெளத்தூர் கிராமத்தில் சூதாட்டக் கும்பல் கைது – ரூ.17 லட்சம் பணம், செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளத்தூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையிலான போலீசார் ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தி, 17 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். இவர்களில் 3 பேர் தமிழ்நாட்டையும், 14 பேர் கர்நாடக மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.17 லட்சம் ரொக்கப் பணம், 17 செல்போன்கள், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 17 பேரையும் நாளை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாகலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.