August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

*புதுச்சேரியில் பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபையின் 250-வது ஆண்டு நிறைவு விழா!

ஹீலியம் பலூன் பறக்கவிட்டு சிறப்பாக கொண்டாட்டம்

புதுச்சேரி, ஆக. 21:

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள பெட்டி செமினார் பள்ளியில், பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபையின் 250 ஆண்டுகால பணியை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

250 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரியில் பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபை மேற்கொண்டுவரும் மறைப்பணி, கல்வி மற்றும் சமூகப் பணிகளின் வரலாறு நினைவுகூரப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் ஹீலியம் பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த ஹீலியம் பலூனை போப் பிரான்சிஸ் கலிலீஸ்ட் அவர்களின் தலைமையில் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் கடந்த 250 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மறைப்பணியின் வரலாற்றில், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, குருத்துவப் பயிற்சி, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

இந்த நீண்ட வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், கடந்த காலப் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் 250-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

250 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூர்ந்து வானில் பறக்கவிடப்பட்ட ஹீலியம் பலூன், இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.