ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு..
ஈரோடு. ஜூன் 02
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி அருகே உள்ள வீராச்சி பாளையம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக முறையான, குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் ரசாயனம் கலந்த கழிவுநீர் கலப்பதாகவும், அதன் காரணமாக தோல் அரிப்பு, வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மேலும் புகார் தெரிவித்தனர்.
மேலும் உரிய நேரத்தில் குடிநீர் வழங்கவும், அவை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தனர்.
பெருந்துறை பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் பெருந்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டு, நிலமும் நிலத்தடி நீரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதன் காரணமாக பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு செய்யாத ரசாயன கல்வி நேரலை பெரும் பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு போராட்டங்கள் பிரச்சனைகள் பெருந்துறை பகுதியில் நிலவி வருவது கடந்த கால கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி, வீராச்சி பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகம் சரியான முறையில் செய்யப்படாததோடு, ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீர் கலந்ததால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்தப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!