சேலம் சிறையில் ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு – கைதி மர்ம சாவு,வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை.
சேலம் மாவட்டம்,அஸ்தம்பட்டியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,200- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, சேலத்தை சேர்ந்த 21 வயது இளைஞரான முத்து லிங்கம் என்பவர் சந்தன மரம் கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறை காவலர்கள், அந்த கைதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த கைதியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
சேலம் சிறையில் மாவட்ட நீதிபதி விசாரணை
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சேலம் மாவட்ட நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை ( மே 29- ஆம் தேதி) சிறைக்கு சென்றிருந்தார். அங்கு, சிறை அதிகாரிகள், சிறை வார்டன்கள் மற்றும் உயிரிழந்த கைதியின் உடன் தங்கியிருந்த பிற கைதிகள் உள்ளிட்டோரிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு இருந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிங்கப்பெண் அதிரடிப்படை – 18 காவல்துறையினர் நியமனம்
சிறை வார்டர் பணியிடை நீக்கம்
இதே போல, உயிரிழந்த கைதியுடன் தொடர்பில் இருந்த சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீதிபதியின் விசாரணையில் சம்பவத்தன்று சிறை வார்டர் ஒருவர் மது போதையில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த சிறை வார்டர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், அந்த சிறை வார்டரை பணியிடை நீக்கம் செய்து சிறை துறையின் உயர் அதிகாரியான கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கைதி உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணை
மேலும், கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கைதி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிறைத்துறை வார்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம் – நிவாரண நிதி அறிவித்த முதல்வர்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.