புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் பெரியமாடு நடுமாடு கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி மதுரை தஞ்சாவூர் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன
போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் வழங்கப்பட்டது.
பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று பந்தய ரசிகர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
நாகுடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்