புதுச்சேரி | மே 1:
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் அன்னை தெரசா சமூக சேவை இளைஞர்கள் அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு இலவச நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் சேவைத் திட்டம் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.
இந்த மனிதாபிமானப் பணிக்கு அறக்கட்டளையின் மாநிலச் செயலாளர் சர்மா தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் கார்த்தி, விஜய பாரதி, ஸ்டீபன், விஜய பிரகாஷ், சரவணன், அசோக் குமார், செல்வராஜ், ஆகாஷ், சியான் மற்றும் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் நலன் கருதி இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் பயணிப்போர், உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் சூட்டைத் தணிக்கும் நோக்கில், தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்ந்த தர்பூசணித் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், “மக்களுக்குச் சேவை செய்வதே மகேசன் சேவை என்ற நோக்கில் எங்களது அறக்கட்டளை இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இந்த வெயில் காலம் முடியும் வரை எங்களது இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்