June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

01.05.2026மாநில தொமுச சார்பில் மே தின விழாஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில்தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்

பத்திரிகை செய்தி

மே–1 தொழிலாளர் தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணிமனை, பிஆர்டிசி பணிமனை, திருவள்ளுவர் பேருந்து நிலையம், சுதேசி பஞ்சாலை, மாஸ் ஹோட்டல், பழைய சட்டக் கல்லூரி, கதிர்காமம், வில்லியனூர், மூலகுளம், ஜேகே பெட்ரோல் பங்க், பாண்லே, புதிய பேருந்து நிலையம், போட்ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டோ மற்றும் டெம்போ, டாக்சி நலச்சங்கம், மேட்டுப்பாளையம் தேவி பாட்டில் தொழிற்சாலை, எம்ஆர்எப், எல்&டி, பெர்கர் பெயிண்ட், மின்துறை உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 37 இடங்களில் தொமுச கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தொமுச நிர்வாகிகள் அங்காளன், சிவக்குமார், மிஷேல், காயாரோகணம், துரை, சீனுவாசன், ராஜேந்திரன், திருக்குமரன், விஜயபாஸ்கர், கண்ணன், ரவி, கொளஞ்சியப்பன், ராஜசேகர், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் அஜிபாஷா, முருகன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், தொமுச கெளரவத் தலைவருமான இரா. சிவா, எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, தொமுச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், பா.செ. சக்திவேல், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், வடிவேல், து. சக்திவேல், ராஜா (எ) தியாகராஜன், கலியகார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், தொமுச நிர்வாகிகள் ராஜாராமன், தட்சிணாமூர்த்தி, அசோக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.