புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சமூக சேவகர் பிரபாகரன், ‘சிலிண்டர்’ சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று திருவள்ளுவர் நகரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரபாகரனுக்கு, அப்பகுதி இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் வீதி முழுவதும் பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய பிரபாகரன் தெரிவித்ததாவது:
“நான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறு வயது முதலே அரசியலில் பயணித்து வருகிறேன். முத்தியால்பேட்டை மண்ணின் மைந்தனான எனக்கு, இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று நன்கு தெரியும்.”
“உங்கள் வீட்டு விசேஷங்கள் முதல் துக்க நிகழ்வுகள் வரை நான் எப்போதும் உங்களோடு இருந்து வருகிறேன். நீங்கள் கேட்கும் உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.”
“நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசு மூலம் கிடைக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் பெற்றுத் தருவேன். குறிப்பாக, இத்தொகுதியின் முக்கியப் பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, தினமும் 12 மணி நேரம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன்.”
இவ்வாறு அவர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!