செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், பிரதமர் Narendra Modi அவர்கள் பதவியேற்ற பின்னர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். பெண்கள் சம உரிமை பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ள அவர், அதே நோக்கத்தின் தொடர்ச்சியாக பெண்களுக்கு 33% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், துணைத் தலைவிகள் மீனா, ஒய். மஞ்சு, சமூக ஊடகப்பிரிவு மாநிலப் பொறுப்பாளர் சுகந்தினி, செயற்குழு உறுப்பினர்கள் மஞ்சுளா, வசந்தி, வேளாங்கண்ணி, சுஜாதா, மாநில செயலாளர்கள் விசாலாட்சி, மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில், இந்திய பிரதமர் Narendra Modi அவர்களின் “நாரி சக்தி வந்தனா” முன்னெடுப்பின் அடிப்படையில், பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு வழங்கும் சட்ட முயற்சிக்கு ஆதரவாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி திருமதி.தாமரைச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு அரசியல் துறையில் சம உரிமை மற்றும் முன்னேற்றம் கிடைக்க இந்தச் சட்டம் முக்கியமானதாக இருக்கும் என்றும், இதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்ல மகளிர் அணி முனைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!