July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு

புதுச்சேரி:

“நம் பிறவியின் பயன் திருவாசகம் எழுதுவதே” என்ற உயரிய நோக்கத்துடன் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள ‘திருவாசக தெய்வீக மாநாடு’* குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் திருவாசகம் எழுதும் நிகழ்வின் ஒரு பகுதியாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு உறுப்பினர்கள் உடனிருக்க, மாநாட்டின் தலைவரும், திருப்பெருந்துறை அடியார்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான ‘திருவாசகத் தென்றல்’ சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து இம்மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து விரிவாக அறிவித்தார்.

இந்த மாநாடானது ஜூலை 25 மற்றும் 26 திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை,மாதவி பன்னீர் செல்வம் மஹாலில் நடைபெற உள்ளது.

மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தை அனைவரும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஞானஜோதி சரவணன் (கம்பன் அறக்கட்டளை நிறுவனர்), சத்தியந்திரன் (கோவை காமாட்சி ஆதீனம் தெய்வீக பேரவை அமைப்பாளர்) மற்றும் புதுவை தமிழ்ச்சங்க செயலாளர் சீனு மோகன் தாஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.