அறந்தாங்கி செப்டம்பர் 21
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செங்கமாரி தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் போஸ் கணேசன் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி எந்தவித நிபந்தனையும் இன்றி ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்போது சம்பா சாகுபடிக்கான புதிய பயிர் கடன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியின்படி ஐந்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பயிர் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்