மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வியூகம்..
ஈரோடு. ஏப்ரல். 14
திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய ஈரோட்டில் நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி விட்டுள்ளது. அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமிக்கும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனி ஐயப்பனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மணல்மேடு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஈரோடு மாநகர அமைப்பாளர்ஜெ. சந்தோஷ் டோமினிக் தலைமை வகித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகரத் தலைவர் பாஷா, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் தில் தார், மாநகரத் துணைத் தலைவர் டைட்டஸ், மாவட்ட துணைத் தலைவர் கே ஏ முத்து பாஷா, உள்ளிட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!