June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

டாக்டர் விஜயகுமார்சூறாவளி சுற்றுப் பயணம்

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை தீரக்க மக்களின்
நாடி துடிப்பறிந்து செயல்படுவேன் என்று அ.தி.மு.க வேட்பாளர்
டாக்டர் விஜயகுமார் பேசினார்.

50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில்
50 க்கும் மேற்பட் கிராமங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரம் கிராமத்தில் தொடங்கி தெத்தூர், உசிலம்பட்டி, எம். இடையபட்டி, பழையபாளையம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்
.வாக்கு சேகரித்த வேட்பாளர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நன்கறிவேன். வெற்றி பெற்றவுடன் தொகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவறை வசதி, மருத்துவ வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன். வேலையின்மை பிரச்சனை தீர்க்க பாடுபடுவேன் என்றார். அத்துடன் மக்களின் நாடி துடிப்பறிந்து செயல்படுவேன் என்று பேசினார். வேட்பாளருடன் அதிமுக நிர்வாகிகள்.
பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.