கோவை ஜன:03
கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் 4-வது குருபீடம் முனைவர் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது:-
கௌமார மடாலயம் கடந்த 135 ஆண்டுகளுக்கு முன் இராமானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது.இந்த மடத்தின் குரு மரபானது முருக பெருமானில் இருந்து தொடங்குகிறது. சிரவை ஆதீனத்தை தோற்றுவித்து முதல் குருமகா சந்நிதானமாக அருளாட்சி செய்த திருவருள் திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் மற்றும் குரு மகாசந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற 5-ந்தேதி என 2 நாட்கள் நடக்கிறது. 5-ந்தேதி திருப்புகழ் இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சி,பக்தி இன்னிசை நிகழ்ச்சி,மேஜிக் ஷோ,நாட்டிய நாடகம்,பெருஞ் சலங்கை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மடத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கே.குமாரசாமி வரவேற்று பேசுகிறார். விழாவில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல், ஐ.நா. சபை சிறப்பு தூதர் ராஜா பி.ஆறுமுகம், மலேசிய நாட்டை சேர்ந்த டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், லண்டனை சேர்ந்த சிவ.தம்பு. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணேஷ் குமார், வடவள்ளி திருப்புகழ் குழுவை சேர்ந்த வைத்தியநாதன் மற்றும் கௌமார மடாலயத்தை சேர்ந்த தவில்-நாதஸ்வர கலைஞர்களான கனகராஜ், கோவிந்தராஜ். மாணிக்கராஜ், கணேசன் ஆகியோர் விருது பெறுகிறார்கள். விழாவில் தவத்திரு. தண்டபாணி சுவாமிகளின் 5-க்கும் மேற்பட்ட நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.
விழாவில் பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார்,மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்,பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசு திருமடம் மௌன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கே.குமாரசாமி உடன் இருந்தார்.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!