லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் அஸ்வின் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் மற்றும் நிர்வாகிகள் கார்த்தி கெயன், அஷோக், தேவா, அருண் சோனி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
கூட்டத்தில் அப்பகுதி மக்களிடம் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்டு, தர்பூசணி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி மகளிர் தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து பேசினர்.
அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டறிந்த ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவை அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர் ஜான் குமார், பொதுச் செயலாளர் சுரேஷ் துரைசாமி, பாஜக மாநில பிரச்சார பிரிவு அமைப்பாளர் பாண்டி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
காமராஜ் நகர் தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு…

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.