கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்று குடிநீர், 100 நாள் வேலை, சாலை வசதி, விவசாயிகளுக்கான பாதை வசதி, வீட்டுமனை பட்டா, ஈ-பட்டா, சுடுகாடு, (மற்றும்) பாதை வசதி, சிமெண்ட் சாலை, மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதி, கேட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 3 மணிக்கு முடிவடைந்தது
மேலும் மாலை நான்கு மணிக்கு காவல்துறையின் முயற்சியால் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதில் மேற்கண்ட கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது
கிளைச் செயலாளர்கள் எம்.ஸ்ரீதர், எம்.ஏழுமலை ஜே.ஆறுமுகம் எம்.செந்தாமரைக்கண்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டி.ரவீந்திரன் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு சு.வேல்மாறன் வட்ட செயலாளர் எஸ்.கணபதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.தாண்டவராயன், கேவீரமணி (மாவட்டகுழு அலுவலக செயலாளர்), தீக்கதிர் ரிப்போட்டர் பொன்னுசாமி, மற்றும் அபிமன்யு, வட்டக் குழு உறுப்பினர்கள் பி.உமாமகேஸ்வரி வி.தனலட்சுமி எம்.பழனி, எம்.ராமலிங்கம், டீ.குப்பன், எஃப்.டேவிட், எஸ்.ஜகாகிர், மற்றும் வாலிபர் சங்க வட்ட செயலாளர் எஸ்.அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.