June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி மே1 புதுக்கோட்டை மாவட்டம்அறந்தங்கி அருகே ,ஆலங்குடி கிராமத்தில் காளியம்மன், கருப்பர், நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுகா,ஆலங்குடி கிராமத்தில் ,காளியம்மன், கருப்பர்,நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்,இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென கோயில் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் சிறப்பான யாகசாலை அமைக்கப்பட்டு முதற்கால யாகபூஜை புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியதுவிழாவின் முக்கிய நாளான இன்று மூன்றாம் காலயாகபூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றதுகடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்ததுபின்னர் கருட பகவான் கோவிலை வட்டமிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நூற்றுக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலங்குடி கிராமத்தினர் செய்திருந்தனர்அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறந்தாங்கி பழனிவேல்