நாள்: 18.04.2026
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. உண்மைக்கு புறம்பான திரிபு வாதங்களை மக்கள் முன் வைத்து குழப்பம் விளைவிக்கும் முயற்சி இது. சிலரின் அரசியல் ஆதாயங்களுக்காக சிறு நரிக்கூட்டங்கள் என நடுநிலைக் கருத்துகளை மடைமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது.
எமது நிலைப்பாடு:
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த உண்மை:
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. அதை மக்களவையில் நிறைவேற்ற விடாமல் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டது யார்? பா.ஜ.க அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்தும் 9 ஆண்டுகள் இந்த மசோதாவை கையில் எடுக்காமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் கொண்டுவந்தது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என நிபந்தனைகள் விதித்து 2029 வரை அமலுக்கு வராத ஒரு மசோதாவை கொண்டுவந்து, அதை எதிர்க்கட்சிகள் தோற்கடித்ததாக நாடகமாடுவது யார்? - பெண்களுக்கு அங்கீகாரம் யார் அளித்தது?
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொண்டுவந்து, பின்னர் 50% ஆக உயர்த்தியது திமுக அரசு. இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் கல்விக்கும் நேரடியாக உதவும் திட்டங்களை செயல்படுத்தும் அரசை “கொச்சைப்படுத்துவதாக” கூறுவது வேடிக்கை. ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை தூக்கிப்பிடித்து ஒட்டுமொத்த அரசின் கொள்கையாக சித்தரிப்பது அறமற்ற அரசியல். இதனை திமுக காங்கிரஸ் கட்சிக்காக சப்பைகட்ட வில்லை அதற்கான அவசியமும் இல்லை ஆனால், சிறுநிரி கூட்டங்கள் என கூறியதால் உண்மையை வெளிப்படுத்தும் தேவையை உணர்த்துகிறோம். - அதிமுகவின் “பெண்ணுரிமை” முகமூடி:
அதிமுக ஆட்சியில்தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கு, சாத்தான்குளம் கொலை, கொடநாடு மர்மம் என பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிரான கொடுமைகள் அரங்கேறின. அப்போது வாய்மூடி மௌனம் காத்தவர்கள் இன்று பெண்ணுரிமை பேசுவது நகைப்புக்குரியது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு வாய்ப்பு அளித்ததாக மார்தட்டிக்கொள்ளும் அதிமுக, கட்சியில் இரண்டாம் கட்ட தலைமையில் எத்தனை பெண்கள் உள்ளனர் என பட்டியலிட முடியுமா? - சிங்கம், நரி உவமை:
மக்கள்தான் உண்மையான சிங்கங்கள். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் தரும் வாய்ப்பு. அதை வைத்து மாற்றுக்கருத்து கொண்டோரை “நரி கூட்டம்” எனவும் சிறுநரிக் கூட்டம் எனவும் வர்ணிப்பது ஜனநாயக பண்பல்ல.
மாற்றுக்கருத்து இல்லாத இடத்தில் சர்வாதிகாரம்தான் மிஞ்சும்.
பெண்களின் உரிமையை வைத்து அரசியல் செய்வதை அதிமுக முதலில் நிறுத்த வேண்டும். உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் இல்லாத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுக்க தைரியம் இருந்தால், அதை செய்யட்டும். வெற்று அறிக்கைகளால் பெண்களை ஏமாற்ற முடியாது.
பெண்கள் விழிப்புடன் உள்ளனர். யார் உண்மையான தோழன், யார் தேர்தல் நேர தோழன் என்பதை அவர்கள் அறிவார்கள். வரும் தேர்தலில் மக்கள் விரோத, பெண்ணுரிமை விரோத பா.ஜ.க-அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்களும் புதுவை மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள்.
மதிப்புமிகு அஇஅதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் போன்றவர்கள் புதுச்சேரி சட்டமன்றத்தில் இல்லாமல் போனதை நினைத்து பலமுறை நாங்கள் வருந்தியுள்ளோம், மக்கள் பிரச்சினைக்கு முழுமையாக குரல் எழுப்புபவர் என்ற அடிப்படையில் ஆனால், தற்போது அதிகார ஆதாயங்களுக்காக இவ்வாறான அறிக்கைகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு,
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர்.
தேசிய மக்கள் முன்னணி

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!