மணப்பாறை மே 22
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் அகிம்சா தொண்டு நிறுவனத்தின் மூலமாக அகிம்சா மவுலி பண்ணை வளாகத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி கடலூர் மாவட்டம் செல்வகுமார் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது அகிம்சா நிறுவன இயக்குனர் விக்டர் விவசாயிகளையும் பயிற்றுவிக்க வந்தவர்களையும் வரவேற்று அறிமுகப்படுத்தினார் பயிற்றுனர் செல்வகுமார் தேனீ வளர்ப்பு பயிற்சி பற்றியும் அதன் முக்கியத்துவம் பாதுகாப்பு பற்றி தேனீக்களால் மனிதர்களுக்கு மருத்துவத்திலும் விவசாயத்திலும் எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுகிறது என்பதனையும் விவசாயிகளுக்கு விவசாயத்தில் மகரந்த சேர்க்கை மூலம் பூக்கும் திறன் விளைச்சலை அதிகப்படுத்தி வழங்குவதன் மூலம் தேனீக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறினார் தேனீக்களை எவ்வாறு வளர்ப்பது என்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்ப்பது பற்றியும் தேன் மனிதனுக்கு சளி இருமலுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது போன்ற கருத்துக்களை விவரங்களையும் தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி தேனீ பற்றிய பய உணர்வை நீக்கினார் விழாவில் அகிம்சா நிறுவனத்தின் பொருளாளர் ராணி பயிற்றுநர் செல்வகுமார் அகிம்சா நிறுவன பணியாளர் சூசைமேரி , மகேஷ், சுதா, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்