கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவேந்தல் தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. மத்தூர் பேருந்து நிலையம் ஆவின் பாலகம் அருகில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு வட்டார தலைவர் தனஜெயம் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சபாபதி, லோகநாதன், ராமன், சசிகுமார், வெங்கடசலபதி, கேசவன், மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட பொதுச் செயலாளர் B.வினோத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, இயேசுதுரை, B.C.சேகர், ஆடிட்டர் வடிவேலு, கோவிந்தராஜன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொடிகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக அனைத்து பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தேவராஜ், முனுசாமி, பெருமாள், பைரோஸ், அம்ஜா, குமரவேல், வேடியப்பன், சந்திரன், காந்தி, செங்குட்டவன், ராமசாமி, வரதன், P.முருகேசன் ஆகியோர் நன்றி கூறினர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.