மத்திய பிரதேசம், குவாலியர் நகரில் நடைபெற்ற C.B.S.E பள்ளிகளுக்கான தேசிய கராத்தே போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின.
இந்த உயரிய போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த Erode Public School மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பான திறமையால் அனைவரையும் கவர்ந்தனர்.
2025 நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்ற 1st CBSE National Karate Championship போட்டியில், நமது பள்ளி மாணவர்கள் முதல் முறையாக தேசிய போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
✨ S.N. நிதீசன் (Grade 7) — வெள்ளிப்பதக்கம் 🥈
✨ R. கபிலன் (Grade 7) — வெண்கலப் பதக்கம் 🥉
அவர்களின் இந்த அபார சாதனை, தமிழகத்திற்கும் Erode Public School பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 🔥🌟
இந்த வெற்றிக்குப் பின், சாதனை படைத்த இரு வீரர்களும் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தபோது,அவர்களின் கராத்தே பயிற்சியாளர் R. Suresh (ஆசிய நடுவர்) மற்றும் பெற்றோர்களையும், சக மாணவர்கள் உள்ளிட்ட அனைவராலும் உற்சாகமான சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 🎉💐
மேலும், இந்த சிறப்பு வரவேற்பு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 🙏💐

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..