June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு டேபிள் மேஜை வழங்கிய சுங்கச்சாவடியினர்.

மணப்பாறை நவம்பர் 8

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள நடு பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவியர் சுமார் 36 பேர் கல்வி பயின்று வருகின்றனர் பள்ளியில் தரையில் அமர்ந்து கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தேசிய நெடுஞ்சாலை துறை தலைமையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியினர் பள்ளிக்கு மாணவர்கள் அமரவும் எழுதுவதற்கு பயன்படும் வகையில் மேஜை மற்றும் டேபிள் 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் வகையில் இளைஞர் சாரண சாரணியர் இயக்க மாணவர்கள் வணக்கம் செலுத்தி வரவேற்றுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர் கொத்து கொடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் பிரவீன் குமாரை வரவேற்று பள்ளியின் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட மேலாளர் செந்தில்குமரன், டீம் லீடர் மகேஷ் ராஜ்குமார், ரெசிடென்சியல் இன்ஜினியர் அருள் சுப்பிரமணியம், மற்றும் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவில் சுங்க சாவடி மேலாளர் பெரியராஜ் வரவேற்று துவக்கி வைத்து. கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் உடன் திட்ட இயக்குனர் பிஸ்கட் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.