பி. கொசவபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.
.திண்டுக்கல்
மாவட்டம். வடமதுரை அருகே உள்ள P கொசவபட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த திட்ட முகாம் அந்த கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வடமதுரை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட இலக்கிய அணி இளங்கோ, நெசவாளர் அமைப்பாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.கொசவபட்டி,எட்டி குளத்துப்பட்டி சுந்தரபுரி, பாப்பிநாயக்கன்பட்டி, சிக்கு fபோல கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஆதார்அட்டையில் பல்வேறு திருத்த சேவைகள், ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் ,செல்போன் எண் மாற்றுதல், மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல்மற்றும் பல்வேறு திருத்தங்கள், வருவாய் துறை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இம்முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை ,கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,மின்வாரியம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை , தகவல் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,வேளாண்மை துறை, எரிசக்தித்துறை, பிற்பட்டுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைஉட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றனர்.மேலும் இம்முகாமில் திமுக முக்கிய நிர்வாகிகள் பண்ணைசுப்பையா, சுப்புராமன், ஆனந்தி அறிவுக்கண்ணன், ஜீவா, அன்பழகன் ,கருப்பையா, ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் வேடசந்தூர் வட்டாட்சியர் மணிமொழி வடமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் (கி.ஊ) மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!