July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உத்தமபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 557 டன் நெல் கொள்முதல் :-தேனி…….. -தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 557 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் நெல்லை விற்பனை செய்த ஓரிரு நாளிலே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.தற்போது நெல் அறுவடை பணி உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில்.தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் உத்தமபாளையத்தில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி,ராமசாமி நாயக்கன்பட்டி உட்பட விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் சம்பந்தமான தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.தரக்கட்டுப்பாட்டு அலுவலரால் சன்னரக நெல் சிறந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழ் உள்ள நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.மேலும் விவசாயிகளின் நெல்லை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை விற்ற உடனே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் பணம் செலுத்தப்படுவதால் விவசாயிகள் மண்டல மேலாளருக்கும் அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.கடந்த மே -1 ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடும் மழை பெய்த போதிலும் நெல்லை மிகச் சிறப்பான முறையில் பாதுகாத்து வைத்ததற்காக நெல் கொள்முதல் நிலைய தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கண்ணகி கோயிலில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்:: பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா:-தேனி. மே.03-வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலில் தேனி மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா கண்ணகி அம்மனை வழிபட்டார்.சித்ரா பௌர்ணமி திருநாளில் மங்கலதேவி கண்ணகி அம்மனை வழிபட்ட பின்பு அவர் தெரிவித்ததாவது: பனியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் சாலை அமைத்தால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை வழிபாடு செய்வார்கள்.சாலை அமைக்கும் பட்சத்தில் தமிழக பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கண்ணகி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.அதற்கு அரசு முழு முயற்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.சாலை அமைப்பது ஒன்றே தமிழக பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை தரிசிப்பதற்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.தேனிமாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கோவில் சேர மன்னன் செரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது.சித்ரா பௌர்ணமி முழு நிலவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.அதுபோல்,கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதி வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயில் வரை நடந்து செல்லும் பாதை 6.6 கி.மீட்டர் உள்ளது.தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும்,கண்ணகி கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி அன்று மாலை 3:30 மணியளவில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி காயமடைந்த கேரள மாநில காவலர் மற்றும் கேரள,தமிழக பக்தர்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி சார்பில் மே தின விழா கழகத்தின் தலைவர் ஆர் எல்...

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலை அறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலை காசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செஞ்சி மே 2விழுப்புரம்மாவட்டம் செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில்...

கொடூர கொலை!புதுச்சேரி ரவுடி கடலூர் அருகே கொடூர கொலை.புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.கடலூர் அருகே உள்ள தாடி நத்தம் வயல்வெளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உடல் சிதைந்த நிலையில் சடலமாக புகழேந்தி மீட்பு.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.புகழேந்தி மீது புதுச்சேரி மாநிலத்தில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை….

செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன்...
செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்...