July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சித்ரா பௌர்ணமி சிறப்பு அலங்காரம்..!

வந்தவாசி, மே 02:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று சித்ரா பௌர்ணமி அன்று மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. மூல மூர்த்திகள் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.