செஞ்சி மே 02
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அதிகாலை அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் தேன் இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து இரவு அம்மனுக்கு பல மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர் இரவு பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் இதில் குத்து விளக்கு ஏற்றி தனது வேண்டுதல்களை முன்வைத்து 1008 முறை குங்குமத்தால் சங்கல்பம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அமைச்சர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தனது வேண்டுதல்களை முன்வைத்தும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனும் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
குறிஞ்சிப்பை வடக்குதாங்கள் அம்மச்சார் அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!