வந்தவாசி, நவ 29:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பிறந்தநாளையொட்டி, எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் வந்தவாசி நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நகர செயலாளர் தயாளன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இஎஸ்டி கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட அலுவலகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு