சேலம் மாவட்டம் மேட்டூர் ராம்நகர் சக்திநகரை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (45). ஷேர் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரது கம்பெனியில் கருமலைக்கூடலை சேர்ந்த 25 வயது பட்டதாரி இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண் ஏழை என்பதால் அவரை மிரட்டி அலுவலகத்தின் மேல் மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு அவ்வப்போது மிரட்டி அருள்பிரகாஷ் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் கடந்த 10ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட அருள்பிரகாஷ், அவருக்கு திருமணம் ஆகக்கூடாது என்ற நோக்கத்தோடு, அலுவலகம் வந்த அந்த பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி இளம்பிள்ளைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு அவரை மிரட்டி தானே திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அருள்பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
அதற்கு அப்பெண் மறுத்த நிலையில், நான் உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி அவரது உறவினரான மகாலட்சுமி என்பவரது வீட்டில் அடைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தற்கொலை முடிவெடுத்து எறும்பு சாக்பீசை தின்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் வந்து மகளை அழைத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகே அருள்பிரகாஷ் தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் அப்பெண், தன்னிடம் ஆசைவார்த்தை கூறி மிரட்டி பலமுறை உறவு கொண்டதுடன், கடத்திச்சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தொழிலதிபர் அருள்பிரகாசை கைது செய்தனர்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.