June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொட்டியபட்டி மற்றும் மேட்டுக்கடை பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களில் சிறப்பு காலை உணவு வழங்கப்பட்டது.மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதியோர்களுக்கு அன்புடன் உணவு பரிமாறப்பட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக நலப் பணிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, மணப்பாறை தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.மேலும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சார்பில் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சேவை மனப்பான்மையை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.