முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் சிறப்பான பணி.
திருச்செங்கோடு. ஜூன். 20
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. அருண்குமார் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதல் கட்டமாக பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்த பிறகு, சி. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டணி அமைச்சரவை அமையப்பெற்று, இன்றைக்கு ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பொதுமக்களுக்கான பொது சுகாதாரம், உள்ளிட்ட முக்கிய பல துறைகள் மீது தனி கவன ம் செலுத்தி, மக்களின் நேரடி பயன்பெறும் துறைகளை துரிதமாக மேம்படுத்த முதலமைச்சர் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
அதில் முக்கியமான ஒரு துறையாக சுகாதாரத்துறை விளங்குகிறது. காரணம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், பொது மக்களுக்கான பொது சுகாதாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும், அதன் மூலம் கிராம முதல் நகரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ பயனாளிகளுக்கு உரிய முறையில் சிறந்த சிகிச்சைகள் கிடைக்கப்பெற்று அவர்கள் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் என்பதனை உறுதி செய்யும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் கே. ஜி அருண்குமார், முதலமைச்சரின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த முறையில் தன்னுடைய துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
ஒரு மருத்துவர் என்ற முறையிலும், சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் அவர் பொது மக்களுக்கான பல்வேறு சிறந்த திட்டங்களை சுகாதாரத் துறையில் செயல்படுத்தி வருகிறார்.
அதே நேரம் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் அவர் இந்த குறுகிய காலகட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு தான் ஒரு மருத்துவர் என்று அடிப்படையில், மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து துள்ளிதமாக கவனித்து, சம்பந்தப்பட்ட அந்தந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கும் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி, மருத்துவப் பயனாளிகளின் நலம் இந்த அரசுக்கு முக்கியம் என்று தெரிவித்து சிறப்பாக நல்ல முறையில் பணியாற்றி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனை வழங்கி, இவருக்கு வருகிறார்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை முதல் கிராமங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை அனைத்திலும் அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள ஒரு அரசின் சுகாதார துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறிது காலத்திலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து நாடி பிடித்து பார்த்து ஒரு சிறந்த துறையின் அமைச்சராக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண்ராஜ் அவர்களை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டி வரும் நிலையில், பொதுமக்களோடு சேர்ந்து அவரின் சிறப்பான மருத்துவப் பணிக்காக நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழ் சார்பில் நாமும் பாராட்டுவோம். சிறக்கட்டும் உங்கள் மக்கள் பணி மற்றும் மருத்துவப் பணி.
அதேபோல் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் எனவே இந்த அரசு மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுகிறோம்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது