June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரண்டுபோன சேலம் ஆத்தூர் – நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்.

கண்ணை மூடி தூங்கிய சித்ரா… நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம். அரண்டுபோன ஆத்தூர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் மனைவி சித்ராவை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் சரவணன் காவல் நிலையத்தில் சரண்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவருடைய மகன் சரவணன் (40). ஏரிவாயு அடுப்பு பழுதுபார்க்கும் தொழிலை செய்து வரும் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு முல்லைவாடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சித்திரா வெளியூரில் உள்ள தனது உறவினர் ஒருவருடன் அடிக்கடி செல்பேசியில் பேசி வருவதை பார்த்த சரவணன் சந்தேகம் அடைந்து தனது மனைவி சித்ராவிடம் இது குறித்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் வாயை துணியால் அடைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு ஆத்தூர் காவல் நிலையத்திற்கு சரவணன் நேரடியாக சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

அதை தொடர்ந்து போலீசில் சரணடைந்த சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலைக்கு இதுதான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன சித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மனைவியின் நடத்தியில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் மனைவி சித்ராவை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் சரவணன் காவல் நிலையத்தில் சரண்.