புதுச்சேரி, ஜூன் 2:
புதுச்சேரியில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஜூன் 8-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை இளைஞரணி தலைவர் எஸ். பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நிலவி வரும் வெயிலின் கொடுமையை அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும்.
குறிப்பாக சிறு குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள தேதியை மறுபரிசீலனை செய்து, பள்ளிகள் திறப்பை ஜூன் 8-ஆம் தேதி வரை ஒத்திவைத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்