June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய மக்கள் முன்னணி

கண்டன அறிக்கை

நாள்: 12.05.2026

பொருள்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு – மத்திய அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் கண்டனம்

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது மத்திய அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியையும், கையாலாகாத்தனத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இந்த அவலத்தை தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசின் கையாலாகாத்தனம்:

  1. தேர்வு நடத்த தகுதியின்மை: 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தேசிய தேர்வை ஒழுங்காக நடத்த முடியாத தேசிய தேர்வு முகமை NTA-வின் தோல்வி மத்திய அரசின் தோல்வியே. 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்பே ₹2 லட்சம் வரை விற்கப்பட்டிருப்பது அரசின் பாதுகாப்புக் கட்டமைப்பு எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுகிறது.
  2. மாணவர்கள் மீது அக்கறையின்மை: வினாத்தாள் கசிவு மே 1-ஆம் தேதியே தெரிந்தும், மே 3-ல் தேர்வை நடத்தி லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பையும், பெற்றோரின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.
  3. தொடர் முறைகேடுகள்: ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, முறைகேடு எனத் தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதைத் தடுக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் தொடர் பாதிப்புகள்:

  • உளவியல் சித்திரவதை: தேர்வு ரத்து, மறுதேர்வு என்ற நிச்சயமற்ற தன்மை மாணவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?
  • பொருளாதாரச் சுரண்டல்: அரசுப்பள்ளி, கிராமப்புற, ஏழை மாணவர்களால் பல லட்சம் செலவு செய்து நீட் பயிற்சி பெற முடியாது. நீட் என்பது பயிற்சி மையங்களின் வியாபாரமாகவும், பணம் படைத்தவர்களுக்கான தேர்வாகவும் மாறிவிட்டது.
  • சமூக அநீதி: 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பைக் குப்பையில் போட்டுவிட்டு, 3 மணி நேரத் தேர்வு ஒரு மாணவனின் மருத்துவர் கனவைத் தீர்மானிப்பது சமூக அநீதி. இது மாநில பாடத்திட்டத்தையும், மாநில உரிமையையும் நசுக்கும் செயல்.
  • எதிர்காலம் கேள்விக்குறி: தேர்வு ரத்தால் மருத்துவக் கலந்தாய்வு தாமதமாகும். ஒரு முழு கல்வியாண்டு மாணவர்களுக்கு வீணாகிறது. இந்த இழப்பை யார் ஈடு செய்வார்கள்?

எங்கள் கோரிக்கைகள்:

  1. நீட் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்.
  2. NTA அமைப்பை உடனடியாகக் கலைத்துவிட்டு, தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
  3. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
  4. வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மன உளைச்சலுக்கான இழப்பீடு வழங்க வேண்டும்.
  5. CBI விசாரணையைக் காலவரையறைக்குள் முடித்து, குற்றவாளிகள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் இந்தக் கையாலாகாத்தனம் இனியும் தொடர்ந்தால், தேசிய மக்கள் முன்னணி நாடு தழுவிய அளவில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம். மாணவர்களின் உயிரோடும் எதிர்காலத்தோடும் விளையாடுவதை உடனே நிறுத்துங்கள்.

இவண்,

சீ.சு.சுவாமிநாமன்
நிறுவனத் தலைவர்
தேசிய மக்கள் முன்னணி
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு
www.dmmparty.con
www.putsf.com

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.