June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அருகேகாவல்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் வாக்குப்பதிவு நிறுத்தம்

பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வெள்ளைக்கோன்பட்டி கிராமத்தில் காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடங்கியது தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் 11 மணி அளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு பகுதியில் ரோந்து சென்றனர்

வெள்ளையக்கோன்பட்டியில் ரோந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தமாறு விரைவு படையினருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில் விரைவு படையினர் அங்கே இருந்த பொது மக்களை தாக்கியதாகவும் அதில் பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் ஒரு நபரை விரைவுப் படையினர் அடித்து அவர்களது வாகனத்தில் ஏற்றி சென்றதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளையக்கோன் பட்டியில் திரண்டு சாலைகளில் கட்டை கற்களை வைத்து மரங்களை வெட்டி போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விரைவு படையினர் வெள்ளையக் கோன் பட்டியில் இருந்து அழைத்துச் சென்ற நபரை ஊருக்குள் கொண்டு வந்து விட்டனர்

இந்நிலையில் ஊர் மக்கள் எந்த தவறும் செய்யாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை வாக்களிக்க மாட்டோம் என்று காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை வாக்குப்பதிவை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

இது பற்றி தகவல் அறிந்ததும் திருச்சி டி ஐ ஜி சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அவருக்கு பாதுகாப்புக்கு ஆக வந்த விரைவுப் படையினரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரட்டி சென்றதில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

பின்னர் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய டி ஐ ஜி தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மாலை 3:30 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது மேலும் ஆர்டிஓ சீனிவாசன் வாக்குப்பதிவு செய்ய கூடுதல் நேரம் வழங்கப்பட்டு வாக்குப்பதிவை தொடர்ந்து இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்கி டோக்கன் வழங்கி வாக்குப்பதிவை நடத்தினர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிவிரைவு படையினர் பொதுமக்களை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது