போடியில் தேர்தல் பணிமனையை திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், எம்பி தங்கதமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்: -தேனி. ஏப்.13- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், காமராஜர் பஜார் சாலையில் ( பொன்னு சினிமாஸ் அமைந்திருந்த இடத்தில்), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, போடிநாயக்கனூர் நகரத்தில் புதிய தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் முதலமைச்சரும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்,தேனி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.முன்னாள் எம்பி ரவீந்திரநாத், திமுக போடிநாயக்கனூர் நகர் செயலாளர் புருசோத்தமன்,போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் போடி சீனிவாச பெருமாள் கோவிலில் போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.போடி கிழக்கு மகாஜன மறவர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார்.தொடர்ந்து சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச் பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.போடி தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.