June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்த பெண்கள்..

தேர்தல் பிரச்சாரத்தில் பெருகும் பெண்களின் ஆதரவு..

ஈரோடு. ஏப்ரல். 13

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கு இந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, தேமுதிக உள்ளிட்ட 23 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, அண்ணன் தங்கச்சி வாரியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களும் தங்கள் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு மதிமுக வேட்பாளராக சா. செந்தில்குமார் அறிவிக்க பட்டார்.

இதனைத் தொடர்ந்து மொடக்குறிச்சி திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில் நாதன் தொகுதி முழுவதும் பம்பரமாய் சுற்றி வந்து பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் தினங்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோர் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு ஆதரவாக தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் காலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு தொகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.